ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
அமீர்கான் நடிப்பில் கடந்தாண்டு இறுதியில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த படம் தங்கல். இந்தியா மட்டுமின்றி சீனாவில் சுமார் ரூ.1000 கோடி வசூலித்து சரித்திரம் படைத்தது. இப்படத்தை இயக்கியவர் நிதேஷ் திவாரி. இவர் அடுத்தப்படியாக ஒரு படத்தை இயக்க தயாராகி வருகிறார். இதில் ஹீரோவாக வருண் தவான் நடிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது வருண் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
வருண் தவான், சுஜித் சிர்கார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார். இதனால் தங்கல் இயக்குநர் படத்திற்கு கால்ஷீட் பிரச்னை எழுந்துள்ளது. இதன்காரணமாக வருண் நடிக்கவில்லை.
தற்போது வருண் தவான், ஜூட்வா-2 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற செப்., 29-ம் தேதி ரிலீஸாக உள்ளது.