சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
கடந்த ஜூலை-21ஆம் தேதி விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் 'விக்ரம் வேதா' படம் ரிலீஸானது. புஷ்கர்-காயத்ரி என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கிய இந்தப்படம் கேரளாவிலும் ரிலீஸானது. கேரளாவில் ஏற்கனவே மாதவனுக்கு நிறைய ரசிகர்கள் இருப்பதாலும், விஜய்சேதுபதியின் படங்கள் ஓரளவு கவனிக்கப்பட்டு வருவதாலும் கணிசமான தியேட்டர்களில் 'விக்ரம் வேதா' ரிலீஸானது. ஆரம்பத்தில் சுமாரான வரவேற்பு தான் இந்தப்படத்திற்கு இருந்ததாம்.
ஆனால் மவுத் டாக் மூலமாக இந்தப்படம் உருவாக்கப்பட்ட விதமும் அதில் மாதவன், விஜய்சேதுபதி இருவரின் நடிப்பும் ரசிகர்களிடையே பரவே படம் பிக்கப் ஆனது. இந்தப்படம் வெளியான அன்றைய தினத்திலேயே, மலையாளத்தில் வெளியான 'சண்டே ஹாலிடே' படத்துக்கு இணையாக இந்தப்படத்திற்கும் கூட்டம் வர ஆரம்பித்தது. தற்போதைய நிலவரப்படி கேரளாவில் மட்டும் சுமார் 5 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கேரள பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் ஆச்சர்யமாக பேசப்படுகிறது.