தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விக்ரம், ஜீவா நடித்த 'டேவிட்' என்ற படத்தை இயக்கியவர் பிஜாய் நம்பியார். கேரளாவைச் சேர்ந்த இவர் மணிரத்னத்திடம் ராவண் ஹிந்திப் படத்தில் உதவியாளராக பணியாற்றினார். அப்படத்தில் நடித்த அபிஷேக் பச்சன் மூலம் அமிதாப்பச்சனிடம் கதை சொல்லி ஒரு ஹிந்திப்படத்தை இயக்கினார்.
தற்போது இவர் இயக்கி வரும் படம் 'சோலோ'. தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் உருவாகி வருவதாக சொல்லப்பட்டாலும் இந்த படத்தை மலையாளத்தில்தான் படமாக்கி வருகின்றனர். துல்கர் சல்மான் கதாநயகனாக நடிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் துல்கர் சல்மான் பிறந்த நாளான ஜூலை 28-ஆம் தேதி அன்று வெளியானது.
4 கதைகள், 3 ஒளிப்பதிவாளர்கள், 11 இசை அமைப்பாளர்கள், 15 பாடல்களுடன் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் யார் யார் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள் என்ற விவரத்தை இப்போது துல்கர் சல்மான் தனது டுவிட்டர் பக்கம் மூலம் வெளியிட்டுள்ளார். 'சோலோ'வில் நேஹா சர்மா, சாய் தன்ஷிகா, சுருதி ஹரிஹரன், ஆர்த்தி வெங்கடேஷ் என 4 பேர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்!
இவர்களில் சுருதி ஹரிஹரன் சமீபத்தில் வெளியான நிபுணன் படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தவர்.