அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
சிம்புவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. இப்படத்திற்கு பிறகு வேறு படங்கள் எதிலும் கமிட்டாகாத சிம்பு, பல வருடங்களுக்கு முன்பு டிராப் பண்ணப்பட்ட கெட்டவன் படத்தை தூசு தட்டி வருகிறார்.
இதுகுறித்து சிம்பு தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது.... "கெட்டவன் கேட்டிடில் கிட்டிடும் ராஜயோகம், யுவன் ஷங்கர் ராஜா இசையில் சிலம்பரசன்.டி.ஆர். படம். 7 முறை விழுந்து விட்டேன், 8-வதாக எழுவேன்; படத்தின் பெயர் மற்றும் இதர விவரங்கள் விரைவில்..." என்று கூறியுள்ளார் சிம்பு.
இன்னொரு டுவீட்டில்... இந்தப்படத்தில் பாடல்கள் கிடையாது, இடைவேளை கிடையாது. படம் ஆரம்பிக்கும் முன்பே, பார்ப்கான், டிரிங்ஸ் வாங்கிவிடுங்கள். செப்டம்பர் 2017-ல் படம் வெளியீடு என்று கூறியுள்ளார்.
சிம்புவின் இந்த டுவீட்டை பார்க்கும்போது, ஏற்கனவே எடுத்த காட்சிகளைக் கொண்டு, எடிட் செய்து முழுப்படத்தைப்போல் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.