அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நாயகனாக அறிமுகமான படம் சகாப்தம். சுரேந்திரன் இயக்கிய அந்த படத்தில் தேவயானி, சிங்கம் புலி ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். கார்த்திக் ராஜா இசையமைத்த அந்த படம் எதிர்பார்த்தபடி சண்முகப்பாண்டியனுக்கு வெற்றியை கொடுக்கவில்லை.
இந்தநிலையில், புதிய உற்சாகத்துடன் தற்போது மதுர வீரன் என்ற படத்தில் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். பி.ஜி.முத்தையா இயக்கும் இந்த படத்தில் சண்முக பாண்டியனுடன் சமுத்திரகனி, மொட்டை ராஜேந்திரன், பாலசரவணன், மைம்கோபி உள்பட பலர் நடிக்கிறார்கள். மதுரை மண்வாசனைக் கதையில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து மதுரை சுற்று வட்டாரங்களிலேயே படமாக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை சமீபத்தில் விஜயகாந்த் வெளியிட்டார். அந்த போஸ்டரில் ஜல்லிக்கட்டுக்காளைப்பார்த்து சண்முகப்பாண்டியன் சீறிக்கொண்டு நிற்பது போல் இடம்பெற்றுள்ளது. ஆக, இந்த படமும் ஜல்லிக்கட்டு கதை பின்னணியில் உருவாகியிருப்பதாக தெரிகிறது. ஏற்கனவே மெர்சல் படத்தில் விஜய், கருப்பனில் விஜயசேதுபதி ஆகியோரும் ஜல்லிக்கட்டுக்கதைகளில் நடித்து வரும் நிலையில், அந்த பட்டியலில் சண்முகபாண்டியனும் சேர்ந்துள்ளார்.