ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கான்சர்ட் வகை படங்கள் ஹாலிவுட்டில் பிரபலம். கான்சர்ட் ஜோனர் என்றால், ஒரு இசைகலைஞர் தன்னுடைய இசைக்குழுவுடன் இணைந்து ஒரு இசை நிகழ்ச்சியை எவ்விதம் வெற்றிக்கரமாக மேடையேற்றுகிறார் என்பதை விவரிக்கும் படம். ஹாலிவுட்டில் இதற்கு முன் ஏராளமான இசைக்கலைஞர்களின் தனிப்பட்ட நிகழ்ச்சியை முன் வைத்து இது போன்ற படங்கள் வெளியாகியிருக்கின்றன.
மைக்கேல் ஜாக்சன் இறப்பதற்கு முன் அவரை வைத்து உருவாக்கப்பட்ட திஸ் இஸ் இட் என்ற கான்சர்ட் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதை முன்மாதிரியாக கொண்டு இந்தியாவிலும் இது போன்ற முன்னணி இசைக்கலைஞராக திகழும் ஏ.ஆர்.ரஹ்மானை முன்னிறுத்தி உருவான கான்சர்ட் வகை படம்தான் ஒன்ஹார்ட்.
ஏ.ஆர்.ரஹ்மான், அமெரிக்காவில் மேற்கொண்ட இசைப்பயணம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த இசைப்பயணத்தின் போது 16 இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சிகளை தொகுத்து ஒரே படமாக உருவாக்கியிருக்கிறார்கள். இந்த படத்திற்கான ஒலி கலவை முழுவதும் டால்பி அட்மாசில் உருவாக்கியிருக்கிறார்கள். படத்தில் 3 தமிழ் பாடல்கள் உள்பட 16 பாடல்கள் இடம் பெற்றுள்ளது.
இதனை ஏ.ஆர்.ரஹ்மானின் தொழில் ரீதியான பயோகிராபி என்று சொல்லலாம். அவர் ஒரு இசைக்குறிப்பை எப்படி உருவாக்குகிறார்? அதனை இசைக்கலைஞர்களுடன் இணைந்து எப்படி மேம்படுத்துகிறார்? அவர் தன்னுடன் பணியாற்றும் இசைக்கலைஞர்களை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறார் என்பதை காட்டும் படம். உலகம் முழுவதும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகிறது. ஆகஸ்ட் 25ந் தேதி இப்படம் வெளியாகலாம் என்று தெரிகிறது.