சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
எண்பதுகளில் ரஜினிக்குள் ஆழமாக ஒளிந்திருந்த இன்னொரு விதமான நடிப்பாற்றலை 'முள்ளும் மலரும்', 'ஜானி' ஆகிய படங்கள் மூலமாக திரையில் கொண்டுவந்தவர் தான் இயக்குனர் மகேந்திரன். கடந்த வருடம் விஜய் நடிப்பில் வெளியான 'தெறி' படத்தின் வில்லனாக்கி இவரை ஒரு நடிகராகவும் அறிமுகப்படுத்தினார் இயக்குனர் அட்லீ. அதை தொடர்ந்து தற்போது பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கிவரும் படத்தில் நாயகன் உதயநிதிக்கு தந்தையாக நடிக்கிறார் இயக்குனர் மகேந்திரன்.
கடந்த வருடம் மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தைத்தான் சில மாற்றங்களுடன் தமிழில் ரீமேக் செய்து இயக்கி வருகிறார் இயக்குனர் பிரியதர்ஷன்.. அந்தப்படத்தில் கதாநாயகனின் தந்தை கேரக்டருக்கும் ரொம்பவே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.. சற்றே ஞாபக மறதி கொண்ட, அதேசமயம் போட்டோகிராபி கலையில் வல்லவராக இந்தப்படத்தில் இயக்குனர் மகேந்திரன் நடிக்க இருக்கிறார். சமுத்திரக்கனி இந்தப்படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர் உதயநிதியின் மாமாவாகவும், கருணாகரன் நண்பராகவும் நடிக்கின்றனர். தென்காசி பகுதியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது..