தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இரண்டு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான 'பிரேமம்' படத்தில் நடித்த ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமான பாராட்டை பெற்றதுடன் ரொம்பவே பிரபலமான நடிகர்களாகவும் மாறிவிட்டார்கள்... அந்தவிதமாக 'பிரேமம்' படத்தில் நிவின்பாலியின் கல்லூரி லெக்சரராக நடித்து கலகலப்பூட்டியவர் நடிகர் வினய் போர்ட். இந்தப்படத்தில் தன்னுடன் வேலைபார்க்கும் தமிழ் பேராசிரியையான சாய் பல்லவியை ஒரு தலையாக காதலித்துக்கொண்டு, அதை அவரிடம் சொல்ல முடியாமல் தவிக்கும் கேரக்டரில் பிரமாதப்படுத்தியிருந்தார்..
தற்போது சில படங்களில் தொடர்ந்து நடித்து வரும் அவர், நேற்று முன்தினம் பள்ளி மாணவர்களுடன் மெட்ரோ ரயிலில் பயணித்து கலகலப்பை ஏற்படுத்தினார். கோட்டயத்தில் உள்ள 'லேபர் இந்தியா பள்ளி' மாணவர்கள் 96 பேர் சமீபத்தில் கொச்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட மெட்ரோ ரயிலில் பயணிக்க விரும்பினர்... அதையடுத்து நடிகர் வினய் போர்ட்டுக்கும் அழைப்பு விடுக்க, அவரும் மாணவர்களுடன் முழு பயணத்திலும் இணைந்து பயணித்து, செல்பி எடுத்து அவர்களை குஷிப்படுத்தினார். மேலும் மாணவர்கள் எதிர்காலத்தில் என்னவாக வேண்டும் என கனவு காண்கிறார்களோ அதை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள் என உற்சாகமூட்டிவிட்டு அவர்களிடமிருந்து விடைபெற்றார் வினய் போர்ட்.