தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டைரக்டர் சூஜித் சிர்கார் இயக்கும் புதிய படத்திற்கு அக்டோபர் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் வருண் தவான் ஹீராவாக நடிக்கிறார் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது இப்படத்தில் வருணுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறாராம்.
இப்படத்தில் ஹீரோயினுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லை என்ற போதிலும் இப்படத்தில் நடிக்க தீபிகா விருப்பம் தெரிவித்துள்ளாராம். பிகி படத்திற்கு பிறகு மீண்டும் சூஜித் சிர்கார் படத்தில் நடிக்க வேண்டும் என தீபிகா விரும்புவதாலேயே இப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளாராம். இருப்பினும் தீபிகா தனது முடிவை அதிகாரப்பூர்வமாக அறிக்காததால் சூஜித் படத்தில் நடிக்க தீபிகா சம்மதிப்பாரா, மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அக்டோபர், ஒரு மெல்லிய காதல் கதையாம். இப்படத்தை ஜூகி சதுர்வேதி எழுத, சூஜித் சிர்கார் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்புக்கள் செப்டம்பர் மாதம் முதல் துவங்க உள்ளதாம்.