ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ள டாய்லெட் ஏக் பிரேம் கதா படம் ஆகஸ்ட் 11 ம் தேதியன்று ரிலீசாக உள்ளது. இப்படத்தில் அக்ஷய்க்கு ஜோடியாக புமி பட்னேகர் நடித்துள்ளார். அக்ஷய் தற்போது இப்படத்தின் புரோமோஷன் வேலைகளை துவக்கி உள்ளார். இதற்கிடையில் சமீபத்தில் அக்ஷய் பேட்டி ஒன்றில், தனக்கு படத்தில் வசூல் பற்றி கவலையில்லை என தெரிவித்துள்ளார்.
பேட்டியில் அவர் கூறுகையில், எனக்கு பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் பற்றி கவலையில்லை. எத்தனை பேர் என் படத்தை பார்க்கிறார்கள் என்பதில் தான் நான் அதிக அக்கறை காட்டுகிறேன். எனது தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் டிக்கெட் விலையை குறைக்க வேண்டும் என விரும்புகிறேன். அப்படி குறைத்தால் நிச்சயம் அதிகமானவர்கள் இப்படத்தை பார்ப்பார்கள். அது நாடு முழுவதும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உதவும் என்றார்.