ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்த காபில் படம், பாக்ஸ் ஆபீசில் நல்லதொரு வரவேற்பை பெற்றது. இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த பாராட்டை பெற்றது. இந்நிலையில் தயாரிப்பாளர் ரோனி ஸ்க்ரீவ்வாலா தான் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிப்பதற்காக ஹிருத்திக்கிடம் பேசி உள்ளாராம்.
பெயரிடப்படாத இப்படம் விளையாட்டை மையமாக கொண்டதாம். அதிலும் கபடியை அடிப்படையாக கொண்ட கதையாம். இப்படத்தை ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்க உள்ளாராம். ஹிருத்திக் ரோஷனுக்கு இப்படத்தின் கதையும், கதையின் கருவும் மிகவும் பிடித்து விட்டதாம். இருப்பினும் ஹிருத்திக் தனது முடிவை இதுவரை சொல்லாததால், இப்படத்தில் ஹிருத்திக் நடிப்பது உறுதி செய்யப்படவில்லையாம்.
அடுத்த ஆண்டு துவக்கத்தில் கிருஷ் 4 படத்தின் வேலைகளை ஹிருத்திக் துவக்க உள்ளார். இதனால் ரோனி ஸ்க்ரீவ்வாலா படத்தில் ஹிருத்திக் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை ஹிருத்திக் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால், கிருஷ் 4 க்கு பிறகு இப்படத்தின் வேலைகள் துவக்கப்படலாம் திட்டமிடப்பட்டுள்ளதாம்.