டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
செளந்தர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ், அமலாபால், காஜோல், சமுத்திரகனி நடித்துள்ள படம் விஐபி-2. ஆகஸ்ட் 11-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இந்தியில் ராஞ்சனா, ஷமிதாப் படங்களில் நடித்து இந்தி ரசிகர்களுக்கு தனுஷ் ஏற்கனவே பரிட்சயமாகி விட்ட தோடு, பிரபல இந்தி நடிகை காஜோலும் இந்த படத்தில் நடித்திருப்பதால் இந்தியில் விஐபி-2 பெரிய அளவில் ரிச்சாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த படத்தையடுத்து பர்பி என்ற இந்தி படத்தை தமிழில் ரிமேக் செய்யப் போகிறாராம் தனுஷ். விஐபி-2 படத்தின் இந்தி பிரமோஷனுக்காக மும்பை சென்றபோது இந்த தகவலை வெளியிட்டுள்ளார் தனுஷ். பர்பி இந்தி படத்தில் ரன்பீர் கபூர்-பிரியங்கா சோப்ரா நடித்திருந்தனர். இந்த படத்தின் அறிவிப்பை விரைவில் தனுஷ் வெளியிடுவார் என்று தெரிகிறது.