டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
2005ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் வெளியான படம் சண்டக்கோழி. விஷால், ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் உள்பட பலர் நடித்த அந்த படம் 200 நாட் கள் ஓடியது. லிங்குசாமி- விஷால் ஆகிய இருவருக்குமே திருப்புமுனையை ஏற்படுத்திய படம் இது. இந்நிலையில், அஞ்சான் படத்திற்கு பிறகு தற்போது லிங்குசாமி, தற்போது சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாராகி விட்டார்.
இந்த படத்திலும் விஷாலே நாயகனாக நடிக்க, கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி நாயகிகளாக நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் இப்படத்திற்காக சென்னையில் பிரமாண்ட செட் அமைக்கும் பணிகள் தொடங்கியிருக்கிறது. இந்த செட்டிற்குள் 40 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடக்கிறதாம். மேலும், இந்த படத்தை வருகிற பொங்கல் தினத்தில் வெளியிடவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.