பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மாஜி ஹீரோ கார்த்திக், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த அநேகன் படத்தில் வில்லனாக நடித்தார். அந்த படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டதால் அதையடுத்து அவர் பல வருடங்களுக்கு முன்பு நடித்திருந்த அமரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாரானார் இயக்குனர் ராஜேஷ்வர். ஆனால் அந்த படம் பின்னர் தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில், தற்போது விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் மீண்டும் வில்லனாக நடித்திருக்கிறார் கார்த்திக். மேலும், இந்த படத்தில் வழக்கமான வில்லனாக இல்லாமல் மாறுபட்ட வில்லனாக நடித்திருக்கிறாராம் கார்த்திக். அவருக்கென்று இன்னும் ரசிகர்கள் இருப்பதால் அவரை பாசிட்டீவ், நெகடீவ் என இரண்டும் கலந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறாராம் விக்னேஷ்சிவன். அந்தவகையில், இந்த படத்தில் வில்லன் கார்த்திக்கிற்கும் தியேட்டரில் கைதட்டல் கிடைக்கும் என்கிறார்கள்.