'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
பூரிஜெகன்னாத் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்துள்ள படம் பைசா வசூல். இந்த படத்தை செப்டம்பர் 1-ந்தேதி வெளியிட இருப்பதாக தயாரிப்பாளர் ஆனந்த பிரசாத் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இப்படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், ஆகஸ்டு மாதம் ஆடியோ வெளியீடு நடக்கிறதாம். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், அடுத்த கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் தனது 102வது படத்தில் நடிக்க தயாராகி விட்டார் பாலகிருஷ்ணா.
மேலும், பைசா வசூல் படத்தில் பாலகிருஷ்ணாவின் பர்பாமென்ஸ் பற்றி டைரக்டர் பூரி ஜெகன்னாத் கூறுகையில், இதுவரை பாலகிருஷ்ணா 100 படங்களில் நடித்து விட்டபோதும், அந்த படங்களில் இல்லாத வித்தியாசமான கெட்டப்பில் இந்த படத்தில் நடித்திருக்கிறார். அதனால் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி எல்லாதரப்பு ரசிகர்களுக்கும் இந்த படம் பிடிக்கும். மேலும், ஆக்சன் கதையில் உருவாகியுள்ள இந்த பைசா வசூல் படத்தில் டூப் இல்லாமல் சண்டை காட்சிகளில் ரிஸ்க் எடுத்து பாலகிருஷ்ணா நடித்துள்ளார் என்கிறார் பூரி ஜெகன்னாத்.