விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
2012ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான படம் தண்டுபால்யா. பூஜா காந்தி நாயகியாக நடித்திருந்த அந்த படத்தை ஸ்ரீனிவாஸ் ராஜூ இயக்கியிருந்தார். அந்த படத்தில் பூஜா காந்தி ஆபாசமாக நடித்திருந்ததாக சர்ச்சைகள் உருவானது. பின்னர் படம் வெளியாகி வெற்றி பெற்றது.
அதே படத்தின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியானது. நடிகை நிக்கி கல்ராணியின் அக்கா சஞ்சனா கல்ராணி அந்த படத்தில் லீடு ரோலில் நடித்திருந்தார். சஞ்சனா ஒரு காட்சியில் நிர்வாணமாக இப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் தணிக்கைக்குழுவினர் அந்த காட்சியை கத்தரித்து விட்டனர். இருப்பினும் அந்தக்காட்சிகள் இணையதளங்களில் எப்படியோ வௌியாகிவிட்டன.
இந்நிலையில், தமிழில் பல படங்களில் நடித்துள்ள சஞ்சனா கல்ராணிக்கு எதிர்பார்த்தபடி திருப்புமுனை அமையவில்லை என்பதால் இந்த படத்தை தமிழில் வெளியிட இருப்பதாக தகவல் வௌியாகி இருக்கிறது.