தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமாவில் என்ட்ரியானதில் இருந்தே மார்க்கெட்டை சீராக வைத்திருப்பவர் காஜல்அகர்வால். தென்னிந்திய படங்கள் மட்டுமின்றி ஹிந்தி படங்களிலும் அவ்வப்போது நடித்து வரும் அவர், பெரும்பாலும் முன்னணி நடிகர்களின் படங்களிலேயே நடித்து வருகிறார். தற்போது கூட அஜித்தின் விவேகம், விஜய்யின் மெர்சல் படங்களில் நடித்திருக்கிறார்.
இந்த நேரத்தில் சமந்தா திருமணத்துக்கு தயாராகி விட்டதால் அவருக்கான படங்களை கைப்பற்றும் முயற்சியிலும் இறங்கியிருக்கும் காஜல் அகர்வாலுக்கு, அடுத்தபடியாக ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் என்பதுதான் நோக்கமாக உள்ளதாம். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்ட எனக்கு ரஜினியுடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது தான் நீண்டநாள் ஆசையாக இருந்து வருகிறது. அந்த வாய்ப்பு விரைவில் கிடைக்கும் என நம்புகிறார் காஜல் அகர்வால்.