Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய், அஜித் படங்களுக்கு சவால் விடும் மகேஷ் பாபு வியாபாரம்

29 ஜூலை, 2017 - 18:06 IST
எழுத்தின் அளவு:
Mahesh-Babu-giving-tough-to-Vijay-and-Ajith

தமிழ்த் திரையுலகத்தில் ஒரு படத்தின் வியாபாரம் என்பது சில நடிகர்களுக்கு மட்டுமே வெளியீட்டிற்கு முன்பாக முழுவதுமாக நடந்து முடிந்து விடும். பலத்த போட்டிகளுக்கு இடையில்தான் சிலர் அந்த வியாபாரத்தை முடிப்பார்கள். ரஜினிகாந்த், விஜய், அஜித் என்ற வரிசையில்தான் அந்த வியாபாரம் இருந்து வருகிறது. மற்றவர்கள் இவர்கள் மூவருக்குப் பிறகே. வியாபாரம் முடிந்த பின் அந்தப் படங்களில் வசூலில் என்ன சாதிக்கிறது என்பது வேறு கதை. ஆனால், வெளியீட்டிற்கு முந்தைய வியாபாரங்களில் இவர்கள்தான் தமிழ்த் திரையுலகத்தில் முதல் நிலை நடிகர்கள்.

ரஜினிகாந்தின் வியாபார நிலவரமே தனி. அவரது வியாபாரத்தை விஜய்யும், அஜித்தும் எட்டிப் பிடிக்க இன்னும் சில வருடங்கள் ஆகலாம். இருந்தாலும் விஜய்யும், அஜித்தும் ரஜினியைப் போலவே பட வெளியீட்டிற்கு முன்பே வியாபாரத்தை முடித்துவிடும் நடிகர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்குப் போட்டியாக இப்போது தெலுங்கிலிருந்து மகேஷ் பாபு வருகிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'ஸ்பைடர்' படம் தமிழ், தெலுங்கில் தயாராகி வருகிறது. இப்படத்தின் வியாபாரம் தற்போது மிகவும் பரபரப்பாக நடந்து வருகிறது. தமிழ் உரிமையை லைக்கா நிறுவனம் சுமார் 30 கோடி கொடுத்து வாங்கிவிட்டது.

அதே சமயம் இந்தப் படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமை சுமார் 90 கோடி வரை விற்கப்படலாம் என்கிறார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி சாட்டிலைட் உரிமை 25 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. ஹிந்தி, மலையாளம் வெளியீட்டு உரிமை 25 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இதுவே 170 கோடி ரூபாய் வரையில் வந்துவிட்டது. இது தவிர மற்ற டிஜிட்டல் உரிமைகள், இதர உரிமைகள் என பலவற்றைச் சேர்த்தால் 200 கோடியைத் தொட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.

இது விஜய், அஜித் படங்களின் வெளியீட்டிற்கு முந்தைய பட வியாபாரத்தைவிட அதிகம். மகேஷ்பாபுவின் இந்தப் போட்டியைச் சமாளிக்க வேண்டுமென்றால் விஜய், அஜித் நடிக்கும் படங்களும் இனி, மகேஷ் பாபு படங்களின் அளவிற்கு வியாபாரமாக வேண்டும். இல்லையென்றால் திரைப்பட வியாபாரத்தில் தென்னிந்திய அளவில் இளம் நடிகர்களில் மகேஷ் பாபு முன்னிலையில் இருப்பார்.

Advertisement
மீண்டும் ஸ்லிம்மான அனுஷ்காமீண்டும் ஸ்லிம்மான அனுஷ்கா அஜித்தை இயக்க ஆசை...  : சவுந்தர்யாவின் டார்கெட் அஜித்தை இயக்க ஆசை... : சவுந்தர்யாவின் ...


வாசகர் கருத்து (7)

Sridhar - Jakarta,இந்தோனேசியா
30 ஜூலை, 2017 - 12:02 Report Abuse
Sridhar எல்லா சினிமா ரசிகர்களும் தியேட்டரில் போய் படம் பார்ப்பதில்லை என சபதம் எடுக்கவேண்டும். வேர்வை சிந்தி நாம் சம்பாதித்த காசை இந்த கேடுகெட்ட கூத்தாடிகளுக்கு கொடுப்பதைவிட ஒரு அனாதைக்குழந்தை படிப்பு செலவுக்கு கொடுக்கலாம் எல்லோரும் நெட்டிலோ அல்லது கேபல் டீவியிலோ படம் பாருங்கள். வெளியே செல்லவேண்டும் என்றால், பீச்சுக்கோ ரெஸ்டாரெண்டிற்க்கோ குடும்பத்தை அழைத்து செல்லுங்கள். தியேட்டரில் 2 மணிநேரம் அடைந்துகிடப்பது உடல்நலத்திற்கு கெடுதல் வேறு
Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
30 ஜூலை, 2017 - 08:35 Report Abuse
mindum vasantham இது முருகதாசின் படம் அதான் இந்த விலை, இப்போ ஷங்கர் முருகதாஸ், ராஜமௌலி இவர்களுக்கு தான் மார்க்கெட்
Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
30 ஜூலை, 2017 - 07:54 Report Abuse
Srinivasan Kannaiya மக்களை மயங்கடித்து சம்பாரிக்கும் பணம் எத்தனை நாளைக்கு வரும்..
Rate this:
30 ஜூலை, 2017 - 07:37 Report Abuse
KrishnaMurthy இதுல அஜித் இல்லை
Rate this:
Balan Palaniappan - Chennai,இந்தியா
30 ஜூலை, 2017 - 03:49 Report Abuse
Balan Palaniappan அதாவது படம் பார்க்கும் இளித்தவாய் மக்கள் இன்னும் அதிக பணம் குடுத்து படம் பார்க்க வேண்டும். அடடா நல்லா இருக்கே. இவர்களுக்குள்ளே போட்டி வருமாம் குப்பனும் சுப்பனும் அதற்கு தியாகம் செய்ய வேண்டுமாம். இது முடியும் ஏன் என்றால் தழிழர்கள் இளித்தவாயர்கள் அல்லவா
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Karu
  • கரு
  • நடிகை : சாய் பல்லவி
  • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
  Tamil New Film Pariyerum perumal
  Tamil New Film Kaala
  • காலா
  • நடிகர் : ரஜினிகாந்த்
  • நடிகை : ஹூயூமா குரேஷி
  • இயக்குனர் :பா.ரஞ்சித்
  Tamil New Film JagaJaala Killaaddi
  • ஜகஜால கில்லாடி
  • நடிகர் : விஷ்ணு விஷால்
  • நடிகை : நிவேதா பெத்ராஜ்
  • இயக்குனர் :எழில்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in