மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி |
பாகுபலி-2 படத்திற்கு முன்பு அனுஷ்கா நடித்த படம் இஞ்சி இடுப்பழகி. இந்த படத்திற்காக தனது உடல் எடையை அதிகப்படுத்தி நடித்தார். பின்னர் அவரால் பழைய உடல்கட்டுக்கு மாற முடியவில்லை. மாதக்கணக்கில் டயட்ஸ், உடற்பயிற்சி செய்தும் பலன் கிடைக்க வில்லை. இருப்பினும் பாகுபலி-2 படப்பிடிப்பை நடத்த வேண்டிய கட்டாயம் இருந்ததால் அனுஷ்காவின் குண்டான உடல்கட்டுடனேயே படப்பிடிப்பை தொடங்கினார் ராஜமவுலி.
அப்படி குண்டு அனுஷ்காவை வைத்து படமாக்கிய ராஜமவுலி, பின்னர் அவரை ஸ்லிம்மாக காட்ட கிராபிக்ஸை பயன்படுத்தியிருக்கிறார். அந்த வகையில், பாகுபலி-2 படத்தின் கிராபிக்ஸ் செலவில் பெரிய தொகை அனுஷ்காவை ஸ்லிம் பண்ணுவதற்காக செலவு செய்யப்பட்டதாம். மேலும், அந்த படத்தில் நடித்து வந்தபோதே பாக்மதி படத்திற்கு கால்சீட் கொடுத்திருந்த அனுஷ்கா இப்போது அந்த படத்தில் நடித்து முடித்து விட்டார்.
அதையடுத்து உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான பிறகுதான் அடுத்த படத்தில் கமிட்டாக வேண்டும் என்று வெயிட் பண்ணிய அனுஷ்கா இப்போது கடுமையான பயிற்சிகளுக்குப்பிறகு தனது உடல் எடையை கணிசமாக குறைத்து மறுபடியும் ஸ்லிம்மாகி வருகிறார். சமீபத்தில் திருமண நிகழ்ச்சிக்கு ஒன்றுக்கு வந்திருந்த அனுஷ்காவின் ஸ்லிம் போட்டோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.