'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை என்பதைப்போல், ரஜினி நடிக்கும் படத்துக்கு விளம்பரம் தேவையில்லை. தன்னுடைய படத்தைப் பற்றி ரஜினி பேசாமலே அவருக்கு விளம்பரம் கிடைத்து விடுகிறது. இன்னொரு பக்கம், ஒவ்வொரு முறை ரஜினி படம் ரிலீஸாகும்போது ஏதாவது ஒரு வித்தியாசமான விளம்பர யுக்தியை தயாரிப்பாளர்கள் கையாண்டு வருகின்றனர்.
'எந்திரன்' படத்தின் இசை வெளியீடு மலேசியாவில் மிகப்பிரம்மாண்டமான முறையில் நடந்தது. 'கபாலி' பட புரமோஷனுக்காக விமானத்தில் கபாலி விளம்பரத்தை பெயிண்டிங் செய்ய வைத்தார் தயாரிப்பாளர் தாணு. '2.0' படத்திற்காக சமீபத்தில் ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது.
இந்நிலையில், தன் பங்குக்கு '2.0' படத்தை புரமோட் செய்ய சைக்கிள் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் நடிகர் ஆர்யா. ஜூலை 30 முதல் 1450 கி.மீ. தூரம் சைக்களிலிலேயே பயணம் செய்ய உள்ளார் ஆர்யா. அவருடைய பயணத்துக்கு '2.0' படத்தை தயாரிக்கும் லைகா ஸ்பான்ஸர் செய்கிறது. எனவே 2.0 படத்திற்காக விளம்பரம் செய்தபடி பயணம் மேற்கொள்ள இருக்கிறார் ஆர்யா.