'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சிவகாரர்த்திகேயனின் நடிப்பு மற்றும் அவரது நண்பர் ஆர்டி.ராஜா தயாரிப்பில், மோகன் ராஜா இயக்கும் 'வேலைக்காரன்' படத்தில் மலையாள நடிகர் பகத் பாசிலும் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.
மலையாளத்தின் முன்னணி கதாநாயகனாக நடித்து வரும் பகத் பாசிலுக்கு என்ன வேடம் கொடுத்திருப்பார்கள்? என்ற கேள்விக்கு தற்போது விடை தெரிய ஆரம்பித்துள்ளது. அதாவது, வேலைக்காரன் படத்தில் வில்லனாக.... நெகட்டீவ் கேரக்டரில்தான் பகத் பாசில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. பகத் பாசிலுடைய கேரக்டரை சஸ்பென்சாக வைத்திருக்கின்றனர். ஆனால் கேரளாவிலோ, பஹத் பாசில் வேலைக்காரன் படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றன.
வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் பஹத் பாசில் அடுத்து 'ஆரண்யகாண்டம்' பட இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.