அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் |
சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள 'சர்வர் சுந்தரம்' படம் ரெடியாகி பல மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது. இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை வாங்கிய கே.ஆர்.பிலிம்ஸ் வாங்கியிருக்கிறது. நிதி சிக்கல் காரணமாக இப்படம் ரிலீஸில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படம் தவிர மணிகண்டன் இயக்கத்தில் 'ஓடி ஓடி உழைக்கணும்', செல்வராகவன் இயக்கத்தில் மன்னவன் வந்தானடி, விடிவி கணேஷ் தயாரிப்பில் 'சக்க போடு போடு ராஜா' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் சந்தானம். 'லொள்ளு சபா' புகழ் சேதுராமன் இயக்கி வரும் 'சக்க போடு போடு ராஜா' படத்துக்கு சிம்பு இசை அமைக்கிறார்.
இந்த படத்திற்காக சிம்பு இசையில் அனிருத், யுவன் சங்கர் ராஜா, டி.ரஜேந்தர், உஷா ராஜேந்தர், உன்னி கிருஷ்ணன் மகன் வாசுதேவ் ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர். 'சக்க போடு போடு ராஜா' படத்தின் பாடல்களை ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்னர். படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்!
ஒருவேளை, சர்வர் சுந்தரம் பிரச்சனை தீராமல் பட ரிலீஸ் தள்ளிப்போனால் 'சக்க போடு போடு ராஜா'வை முதலில் ரிலீஸாகலாம் என தெரிகிறது.