ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'காதல்', 'கல்லூரி', 'வழக்கு எண் 18/9' முதலான படங்களை இயக்கியவர் பாலாஜி சக்திவேல். இவர் இயக்கிய படங்கள் பாராட்டைப் பெற்றாலும் கமர்ஷியலாக பெரிய லாபத்தைக் கொடுக்கவில்லை.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதிய படம் இயக்கும் பாலாஜி சக்திவேல், தான் இயக்கும் படத்திற்கு 'யார் இவர்கள்' என்று பெயர் சூட்டியுள்ளார். இந்த படத்திற்கு விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார். 'மாநகரம்' படத்திற்கு இசை அமைத்த ஜாவித் ரியாஸ் இசை அமைக்கிறார்.
கொலை செய்யும் அளவுக்கு கோபப்படும் ஒருவன், கோபமே இல்லாமல் கொலை செய்யும் ஒருவன்... இவர்கள் தான் இந்த படத்தின் கதை நாயகர்கள். இதில் புதுமுகங்கள் இசக்கி கிஷோர், அஜய் மற்றும் சுபிக்ஷா, பாண்டியன், ராம் முதலானோர் நடிக்கிறார்கள். 'சந்திரா ஆர்ட்ஸ்' நிறுவனம் சார்பில் இப்படத்தை தயாரிக்கும் எஸ்.இசக்கிதுரையின் மகன் இசக்கி கிஷோர் இந்த படத்தின் ஹீரோ.