துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
நேற்று துல்கர் சல்மானின் பிறந்தநாள் என்பதால் அதை முன்னிட்டு அவரையும், அவரது ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தும் விதமாக திரையுலகத்தில் சில நிகழ்வுகள் நடந்துள்ளன.. தற்போது அவர் தமிழ், தெலுங்கில் நடித்துவரும் 'மகாநதி' படத்தில் அவருடைய பர்ஸ்ட்லுக் போஸ்டர், மலையாளம், தமிழ் என இருமொழிகளில் நடித்துள்ள 'சோலோ' படத்தின் டீசர் மற்றும் மலையாளத்தில் அவர் நடித்துவரும் 'பறவ' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் என துல்கர் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு படக்குழுவினரும் துல்கருக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை விதவிதமான முறையில் வெளிப்படுத்தியுள்ளனர்..
இதில் குறிப்பாக 'பறவ' படத்தில் துல்கர் சல்மானின் தோற்றம் தான் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.. விஸ்வரூபம் கமல் பாணியில் மீசையில்லாமல் தாடி மட்டும் வைத்துக்கொண்டு, கையில் புறாவுடன் துல்கர் நிற்கும் போஸ்டர் செம வைரல் ஆகியுள்ளது.. இத்தனைக்கும் இந்தப்படத்தில் சற்றே நீட்டிக்கப்பட்ட கெஸ்ட் ரோலில் தான் துல்கர் நடிக்கிறார்.. காரணம் இந்தப்படத்தை இயக்குவது அவருடன் நான்கு படங்களில் தொடர்ந்து காமெடி நடிகராக நடித்த சௌபின் சாஹிர் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாவதுதான்.
வட கேரளாவில் நடைபெற்றுவரும் புறா பந்தயத்தை மையப்படுத்தி இதன் கதை அமைந்துள்ளதால் இந்த படத்திற்கு 'பறவ' என டைட்டில் வைத்துள்ளார்களாம். பிரேமம் படத்தை தயாரித்த இயக்குனர் அன்வர் ரஷீத் தான் இந்தப்படத்தையும் தயாரிக்கிறார்.