தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இன்று இளம் நடிகர்கள் உடல் எடையை கூட்டிக்குறைக்கும் வேலையை, 56 வயதான நடிகர் மோகன்லால் அசால்ட்டாக செய்துகொண்டிருப்பதுதான் மற்ற நடிகர்களையும் அவர்களது ரசிகர்களையும் கூட வாய்பிளக்க வைத்திருக்கிறது.. சமீபத்தில் அவர் நடித்துவந்த 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' படத்தில் அவரது தோற்றங்கள் வெளியாகின.
அதில் கல்லூரி துணை முதல்வராக சற்று நார்மலான உடல்வாகுடன் சைக்கிள் ஒட்டிக்கொண்டு வரும் மோகன்லாலும், இன்னும் சில புகைப்படங்களில் கையை மடித்துவிட்டு, மீசையை முறுக்கியபடி ஆஜானுபாகுவான உருவத்தில் தாதா போல காட்சியளிக்கும் மோகன்லாலையும் பார்த்தால் யாராலும் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியாது.
தற்போது அந்தப்படத்திற்காக ஏற்றிய உடல் எடையுடன் ஏற்கனவே தான் வழக்கமாக இருந்த எடையையும் சேர்த்து சுமார் 15 கிலோ கணிசமாக குறைக்க இருக்கிறார் மோகன்லால். காரணம் அடுத்ததாக அவர் நடிக்க இருக்கும் 'ஒடியன்' படத்திற்காக.. இந்தப்படத்தில் பிளாக் மேஜிசியனாக நடிக்கும் மோகன்லாலுக்கு ஆக்சன் காட்சிகள் அதிகம் என்பதால், ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னின் ஆலோசனைப்படி தான் இந்த எடைக்குறைப்பை மேற்கொள்ள இருக்கிறாராம் மோகன்லால். அறிமுக இயக்குனரான ஸ்ரீகுமார் மேனன் இயக்கவுள்ள இந்தப்படம், மோகன்லாலின் முந்தைய 'புலி முருகன்' படத்தைவிட அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கிறதாம்.