ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மதயானைக்கூட்டம், கிருமி உள்பட சில படங்களில் நடித்தவர் கதிர். இவர் சமீபத்தில் திரைக்கு வந்த விக்ரம் வேதா படத்தில் விஜய்சேதுபதியின் தம்பியாக நடித்திருந்தார். இந்த நிலையில், கதிர் நடிப்பில் பல மாதங்களுக்கு முன்பே தயாராகி விட்ட சிகை படமும் ஆகஸ்ட் மாதம் ரிலீசுக்கு தயாராகி விட்டது.
அவ்வை சண்முகி படத்தில் கமல், ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் ஆகியோர் பெண் வேடத்தில் நடித்தது போன்று, இந்த படத்தில் கதிரும் பெண் வேடத்தில் நடித்திருக்கிறார். ஜெகதீசன் சுபு இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்ட நிலையில், சில உலகத்திரைப்பட விழாக்களுக்கு படத்தை அனுப்பினர். இன்னும் தாமதம் செய்ய வேண்டும் என்று படத்தை உடனடியாக வெளியிடும் வேலைகளில் இறங்கி விட்டனர்.
மேலும், சிகை படத்தின் டிரைலர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டது. அந்த வகையில், மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள சிகை படத்தின் தமிழ் டிரைலரை சிவகார்த்திகேயனும், மலையாள டிரைலரை நிவின்பாலியும், தெலுங்கு டிரைலரை சமந்தாவும் வெளியிட்டுள்ளார்கள்.