ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? |
சமீபத்தில் வெளியான மீசையமுறுக்கு படத்தில் ஹிப்ஆப் தமிழா ஆதியின் தம்பியாக நடித்திருந்தவர் அனந்த் ராம். அண்ணனுக்காக அடிதடியில் இறங்கும் ஆக்ஷன் தம்பியாக நடித்திருந்தார். இப்போது அனந்த் ராமுக்கு தம்பிக்கள் நிறையபேர் ரசிகர்களாகியிருக்கிறார்கள், இது ஒரு புறம் இருக்க ஒரு தெலுங்கு படத்திலும் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதுகுறித்து அனந்த் ராம் கூறியதாவது:
நடிகனாக வேண்டும் என்று சிறுவயதிலேயே ஆசைபட்டேன். லயோலாவில் விஸ்காம் படித்து முடிக்கும் போது கூத்துப்பட்டறை, அல்கமி ஸ்கூல், லண்டன் டிரினிட்டி நடிப்பு பயிற்சி பள்ளி ஆகிய இடங்களில் பயிற்சிப் பெற்று என்னுடைய திறமைகளை வளர்த்துக் கொண்டு, கடந்த நான்காண்டுகளுக்கும் மேலாக நல்லதொரு வாய்ப்பிற்கான தேடலில் இருந்தேன். பொன்மாலைப் பொழுது, புகழ் ஆகிய படங்களில் சிறிய வேடங்களிலும், நாடகங்களிலும் நடித்தேன்.
நண்பர்கள் மூலமாக 'மீசைய முறுக்கு' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில் ஆதி அண்ணாவின் தம்பியாக நடித்தேன். படபிடிப்பு முழுவதும் இளைஞர் பட்டாளம் என்பதால் ஜாலியாக இருந்தது. இந்த படத்தில் சண்டைக் காட்சிகள் இருந்ததால் சண்டை பயிற்சி மற்றும் பாக்ஸிங் கற்றுக்கொண்டேன். இதனால் சண்டைக் காட்சிகள் நன்றாக அமைந்துள்ளது. படத்தைப் பார்த்தவர்கள் என்னுடைய நடிப்பைப் பற்றி பாராட்டி பேசியது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது.
நல்ல கதாப்பாத்திரங்களில் நடித்து குணசித்திர நடிகராகவும், வில்லன் நடிகராகவும், ஹீரோவாகவும் சாதிக்கவேண்டும் என்ற எண்ணமிருக்கிறது. எல்லா வகையான சவாலான கேரக்டர்களிலும் நடிக்கும் சிறந்த நடிகராகவே இருக்க விரும்புகிறேன். "மீசைய முறுக்கு" படத்தின் மூலம் ஒரு நல்ல நட்பு வட்டாரம் கிடைத்திருக்கிறது. இதனை தக்கவைத்துக் கொண்டே தொடர்ந்து திரையுலகில் இஷ்டப்பட்டும் கஷ்டப்பட்டும் நடித்து முன்னேறவே ஆசைப்படுகிறேன். இப்படத்தைத் தொடர்ந்து ஒரு தெலுங்கு படத்தில் ஹீரோவாகவும், ஒரு தமிழ் படத்தில் வில்லனாகவும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன். விரைவில் தயாரிப்பு தரப்பிலிருந்து முறைப்படி இதனை அறிவிப்பார்கள். என்றார் அன்ந்த் ராம்.