ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
வக்கந்தம் வம்சி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கயிருக்கும் படம் நா பேரு சூர்யா. இந்த படத்தில் அவர் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். அனு இம்மானு வேல் நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் அர்ஜூன், சரத்குமார் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
மேலும், இந்த படத்திற்காக தனது உடல்கட்டை தயார் செய்ய யுஎஸ்ஏ சென்று ஒரு பிசிக்கல் டிரைனரிடம் அல்லு அர்ஜூன் சில மாதங்களாக பயிற்சி எடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அந்த செய்தியை மறுத்திருக்கிறார் அல்லுஅர்ஜூன். அதோடு, நா பேரு சூர்யா படத்திற்காக உடல் கட்டை மாற்ற நான் யுஎஸ்ஏ செல்லவில்லை. அங்குள்ள ஒரு பயிற்சியாளரை ஐதராபாத்துக்கு வரவழைத்து பயிற்சி எடுத்தேன் என்று கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 12-ந்தேதி முதல் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.