வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
சிபிராஜ் நடித்த 'கட்டப்பாவ காணோம்' படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே, தனது அடுத்த படமான 'சத்யா'வில் வெற்றியைப் பெற்றே தீர வேண்டும் என்பதற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார் சிபிராஜ்.
தெலுங்கில் சூப்பர்ஹிட்டான 'க்ஷணம்' என்ற படத்தின் ரீமேக்காக உருவாகியிருக்கும் 'சத்யா' படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வருகிறார். 'கட்டப்பாவ காணோம்' படம் உருவாகிக் கொண்டிருந்தபோது 'க்ஷணம்' தெலுங்குப் படத்தைப் பார்த்த சிபிராஜுக்கு படம் மிகவும் பிடித்துப்போனதால், தனது குடும்பத்தினரையும் அந்தப்படத்தைப் பார்க்க வைத்துள்ளார்.
அவர்களும் 'க்ஷணம்' பார்த்துவிட்டு, 'இப்படத்தை தமிழில் ரீமேக் செய்து அதில் நீயே நடிக்கலாம்' என கூறியதால், உடனடியாக 'க்ஷணம்' படத்தின் ரீமேக் உரிமையை வாங்கினாராம் சிபிராஜ். இந்த விஷயம் அறிந்த விஜய் ஆண்டனி தன்னை வைத்து சைத்தான் படத்தை இயக்கி வரும் பிரதீப் பற்றி சிபாரி செய்ய, அவருக்கு வாய்ப்பு கொடுத்தாராம் சிபி.
'சத்யா' பட ஷூட்டிங் சமயத்தில் சிபிராஜே டயர்டாகும் வகையில் பல 'டேக்'குகள் நடிக்க வைத்தாராம் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. அதனால் முதலில் கடுப்பான சிபி, பிறகு படத்தின் இறுதி வடிவத்தைப் பார்த்ததும் இயக்குநரை பாராட்டினாராம்.