பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
பாகுபலி புகழ் ராணா, ஹீரோவாக நடித்து அடுத்து வெளியாக உள்ள படம் நேனே ராஜா நேனே மந்திரி. காஜல் அகர்வால், கேத்ரின் தெரஸா ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இப்படம் தமிழ், மலையாளம் மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸாக உள்ளது. தமிழ் பதிப்பிற்கு நான் ஆணையிட்டால் என எம்ஜிஆர்., படத்தின் பாடல் வரியை தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.
இப்படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது பேசிய இப்பட இயக்குநர் தேஜா... "நான், சென்னையில் பிறந்து வளர்ந்தேன். சென்னை பாண்டிபஜார் பிளாட்பாரத்தில் படுத்திருக்கிறேன். வறுமை, பசி இரண்டும் தெரியும். மும்பையில் படம் எடுத்தேன். பின் தெலுங்கில் படம் எடுத்தேன். தமிழில் எனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.
நான் எம்ஜிஆர் ரசிகன், அதனால் தான் "நான் ஆணையிட்டால்" தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்று வைத்தேன். தற்போது ஆட்சியில் நடக்கின்ற போக்கை எம்.ஜி.ஆர் தற்போது இருந்தால் எப்படி கையாள்வாரோ அப்படிபட்ட திரைப்படம் தான் நான் ஆணையிட்டால் நடிகர் ராணா எம்.ஜி.ஆர்., ஆக நடித்திருக்கிறார். காஜல் அகர்வால், ராணா மனைவியாக நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இடம்பெற்ற பச்சை கிளி முத்துச்சரம் பாடலை இந்த படத்தில் வைத்துள்ளேன். இதில் வரும் வசனம் நூறு எம்,எல்.ஏ.,களை கூவத்தூரில் அடைத்து வைத்தால் நானும் முதல் அமைச்சர் ஆவேன் என்ற வசனம் முன்னாடியே எழுதி இருந்தோம். ரிசார்ட் என்பதை கூவத்தூர் என்று மட்டும் மாற்றினோம். இன்றைய அரசியல் சரியான முறையில் இல்லை, பொதுமக்கள் கேள்விகளுக்கு இந்தப்படம் பதில் சொல்லும்.
இவ்வாறு தேஜா பேசினார்.