ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சமீபத்தில் மலையாளத்தில் வெளியான படம் தான் 'சன்டே ஹாலிடே. ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளி, ஆஷா சரத், சீனிவாசன் உபட பலர் நடித்திருந்த இந்தப்படத்தை ஜிஸ் ஜாய் என்பவர் இயக்கியுள்ளார். சமீபத்திய படங்களில் நல்ல படம் என சொல்லும் அளவுக்கு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுக்களை இந்தப்படம் பெற்றுள்ளது. அதுமட்டுமல்ல வெளியான பத்து நாட்களில் எட்டு கோடி ரூபாய் வசூலித்து ஆச்சர்யப்படுத்தியும் இருக்கிறது.
இதன் கதையம்சம் மற்ற தென்னிந்திய மொழிகளுக்கும் பரவலாக பொருந்தக்கூடிய ஒன்றுதான். அதனால் இந்தப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்போவதாக படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனேகமாக இதன் தமிழ் ரீமேக்கிலும் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளியே நடிக்கலாம் என தெரிகிறது. தமிழில் வெளியான '8 தோட்டாக்கள்' படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் இந்த அபர்ணா பாலமுரளி தான் என்பது குறிப்பிடத்தக்கது.