'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
பிருத்விராஜ் நடிப்பில் புதிதாக உருவாக இருக்கும் படம் ஆடுஜீவிதம். பிரபல இயக்குனர் பிளஸ்சி இயக்குகிறார். பல கனவுகளோடு சவூதி அரேபியாவுக்கு சென்று அங்கே அடிமையாய் பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் ஒரு பட்டதாரி இளைஞனைப் பற்றிய கதை தான் இந்தப்படம். இதற்காக நவ-17 முதல் மார்ச்-19 வரை சுமார் பதினெட்டு மாதங்கள் தேதி ஒதுக்கியுள்ளதாக அறிவித்தார் பிருத்விராஜ். இந்தப்படத்தில் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறுவித தோற்றங்களில் பிருத்விராஜ் நடிக்க வேண்டி இருப்பதால் தான் இந்த ஒன்றரை வருட காலம் கால்ஷீட் தேவைப்படுகிறதாம்.
தற்போது இந்தப்படத்தின் கதாநாயகி, நாயகனுடன் இணைந்து நடிக்கும் நண்பன் மற்றும் நாயகனின் அம்மா ஆகிய மூன்று கேரக்டர்களில் நடிக்க ஆட்கள் தேவை என தனது பேஸ்புக் பக்கத்தில் விளம்பரப்படுத்தியுள்ளார் பிருத்விராஜ். ஆனால் அதற்காக சில நிபந்தனைகளையும் விதித்துள்ளார்கள். குறிப்பாக இந்த மூவரும் ஒன்றரை வருடம் இந்தப்படத்திற்காக மட்டுமே ஒதுக்க வேண்டும் என்பதும் வேறு எந்த படங்களில் நடிக்க கூடாது என்பதும் முக்கியமான நிபந்தனை..
நாயகனின் நண்பனாக நடிப்பவர் தனது சொந்த ஊரை தவிர வெளியுலகை பற்றி அவ்வளவாக அறிந்திராதவராக இருக்க வேண்டுமாம். மேலும் நார்மலான உடல்வாகுடன் இருக்கும் அவர் படத்தின் வெவ்வேறு காலகட்டத்தை பிரதிபலிக்கும் காட்சிகளுக்காக தனது உடல் எடையை அவ்வப்போது குறைக்க வேண்டியும் இருக்குமாம். அதுமட்டுமல்ல பாலைவனத்தில் படமாக்கப்படும் காட்சிகளில் அதன் சூழலை தாங்கும் உடல்நிலை மற்றும் மனோநிலையும் அவருக்கு இருக்க வேண்டுமாம். கதாநாயகியாக நடிப்பவருக்கான காட்சிகளின் நேரம் குறைவு என்றாலும் அவரும் ஒன்றரை வருடம் இந்தப்படத்தை விட்டு நகரக் கூடாதாம்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.