தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒரு சாதனை உருவான அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்த சாதனை முறியடிக்கப்பட்டிருக்கிறது. 'மெர்சல்' படத்தின் முதல் பார்வை டுவிட்டரில் அதிகமாக ரிடுவீட் செய்யப்பட்ட படம் என்ற சாதனையை படைத்தது. 50 ஆயிரம் முறை அது ரிடுவீட் செய்யப்பட்டிருந்தது. அந்த சாதனையை அடுத்த சில மணி நேரங்களில் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் முதல் பார்வை முறியடித்துவிட்டது. இந்தப் படத்தை 53 ஆயிரம் பேர் ரிடுவீட் செய்துள்ளனர். அதுவும் இரண்டு நாட்களிலேயே இது நிகழ்ந்ததும் புதிய சாதனைதான்.
சமூக வலைத்தளங்களில் விஜய், அஜித் ரசிகர்கள் தான் அதிகம் செயல்படுகிறார்கள் என்பது இருந்தது. இப்போது சூர்யாவின் ரசிகர்களும் அந்த போட்டியில் சேர்ந்துள்ளார்கள். அடுத்த சில வாரங்களுக்கு இவர்களுக்குள் பலத்த போட்டியை எதிர்பார்க்கலாம்.
'விவேகம்' டிரைலர், 'மெர்சல்' டீசர், 'தானா சேர்ந்த கூட்டம்' டீசர் என அடுத்தடுத்து வெளிவர உள்ளன. இதில் எந்தெந்த படங்கள் சாதனை படைக்கப்போகிறது என்பதில் கடும் போட்டி இருக்கும். ஆனாலும், இவர்களின் சண்டையை ஓவியாவின் ரசிகர்கள் மிஞ்சி விடுவார்கள் என்பது நிஜம்.