Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் சங்கம் கட்டடம் கட்ட தடையில்லை : ஐகோர்ட்

25 ஜூலை, 2017 - 15:14 IST
எழுத்தின் அளவு:
No-ban-to-construct-Nadigar-Sangam-building

நடிகர் சங்க வளாகத்தில் கட்டடம் கட்ட விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை சென்னை ஐகோர்ட் நீக்கியுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சென்னை, அபிபுல்லா சாலையில் சொந்தமாக நிலம் உள்ளது. இங்கு நடிகர் சங்கத்தின் புதிய கட்டடம் கட்டப்பட இருக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் பூமி பூஜை எல்லாம் நடந்தது. ரஜினி, கமல் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

இந்நிலையில் சென்னை, தி.நகரை சேர்ந்த ஸ்ரீரங்கன், அண்ணமாலை ஆகியோர் நடிகர் சங்கம், 33 அடி சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், தி.நகரில், அபிபுல்லா சாலையையும், பிரகாசம்சாலையையும் இணைக்கும் விதமாக, 33 அடி சாலை இருந்தது. தென்னிந்திய நடிகர் சங்கம், இந்த பகுதியில், 1956ம் ஆண்டில் நிலம் வாங்கியது. தற்போது, சாலையையும் ஆக்கிரமித்து, 18 கிரவுண்ட்டுக்கு உரிமை கோருகிறது. 33 அடி சாலையையும் சேர்த்து, பட்டா பெற்று விட்டனர். மேலும் குடியிருப்பு பகுதியில் அடுக்கமாடி வளாகம், தியேட்டர் கட்ட முடியாது. விதிமுறையை மீறி கட்டடம் கட்ட அனுமதி பெற்றுள்ளனர். எனவே, 33 அடி அகலமான சாலையில், கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதை ஏற்ற சென்னை ஐகோர்ட், கட்டடம் கட்ட இடைக்கால தடை விதித்து இருந்தது. அதோடு உரிய விளக்கம் கேட்டு நடிகர் சங்கம், தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எந்த ஆக்கிரமிப்பும் செய்யப்படவில்லை என நடிகர் சங்கம் தங்கள் தரப்பு விளக்கத்தை கொடுத்தது. இதை ஏற்று கொண்ட நீதிமன்றம், கட்டடம் கட்ட விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கியது. வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in