Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எத்தனை ஜிஎஸ்டி வந்தாலும் சினிமா அழியாது: சுந்தர்.சி

25 ஜூலை, 2017 - 10:42 IST
எழுத்தின் அளவு:
No-End-to-Cinema-even-so-much-GST-introduce-says-Sundar-C

தனது அவ்னி மூவீஸ் சார்பில் சுந்தர்.சி, தயாரித்துள்ள படம் மீசைய முறுக்கு. ஹிப்ஆப் தமிழா ஆதி இயக்கி நடித்துள்ளார். ஆத்மியா, மாளவிகா, விக்னேஷ்காந்த், சாரா, ஆனந்து, வினோத், உள்பட பலர் நடித்திருந்திருந்தார். தற்போது இந்தப் படம் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இதையொட்டி ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு சுந்தர்.சி பேசியதாவது:

இந்தப் படம் ஏ செண்டரில் மிகப்பெரிய ஓப்பனிங்குடன் ஓடும் என்று கணித்திருந்தேன். ஆனால் இப்போது பி அண்ட் சி செண்டர்களிலும் நன்றாக ஓடி எதிர்பாராத வெற்றியை கொடுத்திருக்கிறது. இது நல்ல படம், நன்றாக ஓடும் என்று நான் தான் சொல்லிக் கொண்டு திரிந்தேன். ஆனால் மற்றவர்கள் யாரும் நம்பவில்லை. இண்டர்நெட் பசங்கல்லாம் சினிமாவுக்கு செட் ஆக மாட்டாங்கன்னு சொன்னாங்க. ஆனால் இன்றைக்கு அப்படி சொன்னவர்கள் ஆச்சர்யப்படும் அளவிற்கு படம் ஒடிக் கொண்டிருக்கிறது.

250 தியேட்டரில் படத்தை வெளியிட்டோம், திங்கள் கிழமை முதல் அது இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. கேரளாவில் தியேட்டரே தரவில்லை. இப்போது கூப்பிட்டு கூப்பிட்டு தருகிறார்கள். நானும் நிறைய வெற்றிப் படங்கள் தயாரித்திருக்கிறேன், இயக்கி இருக்கிறேன். இதுபோன்ற ஒரு மகத்தான வெற்றியை சந்தித்ததில்லை.

இந்தப் படம் போன்று விக்ரம் வேதா படமும் வெற்றிகரகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரி பிரச்சினையால் மக்கள் தியேட்டருக்கு வரவில்லை. தியேட்டர்கள் காற்று வாங்குகிறது. சிங்கிள் டிஜிட்டில்தான் ஆடியன்ஸ் தியேட்டருக்கு வருகிறார்கள். இனிமேல் சினிமா அவ்வளவு தான் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் இன்றைக்கு இரண்டு படத்தையும் பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருகிறார்கள். நல்ல படம் கொடுத்தால் எவ்வளவு காசு கொடுத்தும் பார்ப்போம் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். ஒரு ஜிஎஸ்டி அல்ல. எத்தனை வரி வந்தாலும் சினிமா அழியாது. சினிமாவிற்கு அழிவென்பதே கிடையாது. என்றார் சுந்தர்.சி.

Advertisement
போதை பொருள் விசாரணை: நடிகை சார்மி எதிர்ப்புபோதை பொருள் விசாரணை: நடிகை சார்மி ... காஜல் அகர்வால் மேனேஜர் கைது காஜல் அகர்வால் மேனேஜர் கைது


வாசகர் கருத்து (12)

Aarkay - Pondy,இந்தியா
26 ஜூலை, 2017 - 02:00 Report Abuse
Aarkay முதலில், ஒழுங்கா பாக்கற மாதிரி படம் எடுங்க ஹீரோயினை நம்பி எடுக்காதீங்க
Rate this:
g.s,rajan - chennai ,இந்தியா
25 ஜூலை, 2017 - 14:10 Report Abuse
g.s,rajan நடிகர் நடிகைகளின் சம்பளத்தைக் குறையுங்க, தயாரிப்புச் செலவுகளைக் குறையுங்க அப்போதான் டிக்கெட் நியாயமாக காசு கொடுத்து தியேட்டரில் சாமானிய மக்கள் பார்க்க முடியும்.
Rate this:
mukundan - chennai,இந்தியா
25 ஜூலை, 2017 - 14:08 Report Abuse
mukundan 30% கேளிக்கை வரி விதித்த மாநில அரசை குறை சொல்ல முடியாத இந்த பயந்தான்கொள்ளி 18% GST வரி விதித்த மத்திய அரசை நோக்கி குறைக்கிறது.
Rate this:
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
25 ஜூலை, 2017 - 13:45 Report Abuse
Swaminathan Nath GST யால் எப்படி அழியும், லோக்கல் மாநில வரியை குறையுங்கள்.. GST இல் மாநிலத்திற்கு பாதி வரி வருகிறது, மற்றவர்களை குறை சொல்ல வேண்டாம்,
Rate this:
Dol Tappi Maa - NRI,இந்தியா
25 ஜூலை, 2017 - 13:31 Report Abuse
Dol Tappi Maa ஏமாந்தவர்கள் இருக்கிறவரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள் என்று சொல்லி விட்டு போங்க .
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devil Night Dawn of the Nain Rouge
  Tamil New Film Oru Kathai Sollatuma
  Tamil New Film Billa Pandi
  • பில்லா பாண்டி
  • நடிகர் : ஆர் கே சுரேஷ்
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :சரவண சக்தி
  Tamil New Film Velaikkaran
  • வேலைக்காரன்
  • நடிகர் : சிவகார்த்திகேயன்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :ஜெயம் ராஜா

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in