இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அர்ஜுன், வரலட்சுமி, பிரசன்னா, ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி மணிரத்னம் முதலானோர் நடித்துள்ள படம் - 'நிபுணன்'. அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் அர்ஜுனின் 150 ஆவது படம். இப்படத்தை இம்மாதம் 7-ஆம் தேதியே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் திடீரென்று அறிவிக்கப்பட்ட தியேட்டர் ஸ்டிரைக்கால் நிறைய படங்களின் ரிலீஸ் பாதிக்கப்பட்டதைப்போலவே நிபுணன் படமும் பாதிக்கப்பட்டது. அதாவது படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் 'நிபுணன்' திரைப்படத்தை வருகிற 28-ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர்.
இதே தினத்தில் தனுஷின் 'வேலையில்லா பட்டதாரி-2' படம் வெளியாவதாக இருந்தது. ஹிந்தி வெர்ஷன் சென்சார் முடியாததால் தற்போது அந்தப் படம் வெளியாகவில்லை. எனவே நிபுணன் படத்துக்கு கூடுதல் தியேட்டர்கள் கிடைத்திருக்கின்றன.
இதே நாளில் அசோக் செல்வன், பிரியா ஆனந்த் நடித்துள்ள 'கூட்டத்தில் ஒருத்தன்' படமும் வெளியாகவிருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருந்து வந்த 'விஐபி-2' படம் வெளிவராததினால் ஏற்படும் ஏமாற்றத்தை, நிபுணன், கூட்டத்தில் ஒருத்தன் படங்கள் நிவர்த்தி செய்யுமா?