இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கே.ஈ.ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் சூர்யாவுடன், கீர்த்தி சுரேஷ், சுரேஷ் மேனன், கார்த்திக், ரம்யாகிருஷ்ணன், தம்பி ராமையா, செந்தில், ஆர்.ஜே.பாலாஜி முதலானோரும் நடிக்கிறார்கள்.
சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை-23 அன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. மாலை ஆறு மணிக்கு செகண்ட்லுக் வெளியிடப்பட்டது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக்கிற்கு சூர்யாவின் ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில் இந்த படத்தின் 'நானா தானா வேணா போனா...' என்று துவங்கும் பாடலை வருகிற 27-ஆம் தேதி சிங்கிள் டிராக்காக... வெளியிடவிருக்கிறார்கள்! இந்த தகவலை தானா சேர்ந்த கூட்டம் படத்தின் இயக்குநரான விக்னேஷ் சிவன் உறுதிபடுத்தியுள்ளார்.
சூர்யாவும், அனிருத்தும் முதன் முதலாக இணைந்துள்ளதால் இப்படத்தின் ஆடியோ உரிமையை பெரும்விலை கொடுத்து முன்னணி இசை நிறுவனமான சோனி வாங்கியுள்ளது.