தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சீனு ராமசாமி இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்துள்ள படம் இடம் பொருள் ஏவல். இப்படம் முடிந்து இரண்டு வருடங்களாகியும் இன்னும் வெளிவராமலே உள்ளது. இப்போது படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிடும் வேலைகளை தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்துவிட்டதாம்.
விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால் இருவருக்கும் தமிழ்த் திரையுலகில் தற்போது நல்ல வரவேற்பு உள்ளது. அதோடு சீனு ராமசாமி இதற்கு முன் இயக்கி விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த தர்மதுரை படமும் வியாபார ரீதியாக வெற்றி பெற்ற படமாக அமைந்தது. அதனால், இடம் பொருள் ஏவல் படத்திற்கும் வினியோகஸ்தர்களிடமும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு உள்ளது.
சமீபத்தில் இந்தப் படத்தை மும்பையில் சிலருக்குத் திரையிட்டு காட்டியுள்ளார்கள். மொழி தெரியாத பலர் படத்தைப் பார்த்து விட்டு கிளைமாக்சில் எழுந்து நின்று கைதட்டி பாராட்டி உள்ளார்கள். இடம் பொருள் ஏவல் படத்தில்தான் இசையமைப்பாளர் யுவனும், வைரமுத்துவும் முதல் முறையாக இணைந்தார்கள். இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்துமே இனிமையான பாடல்கள் என இசை ரசிகர்கள் ஏற்கெனவே பாராட்டிவிட்டார்கள்.
சீனு ராமசாமி அடுத் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் மாமனிதன் பட வேலைகளில் இறங்கிவிட்டார். யுவன் ஷங்கர் ராஜா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜாவும், யுவனும் சேர்ந்து இசையமைக்க உள்ளார்களாம்.