‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் அறிமுகமானவர் அரவிந்த்சாமி. முதல் படத்திலேயே ரஜினி-மம்மூட்டியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பினை பெற்ற அவர், அதையடுத்து ரோஜாவில் சிங்கிள் ஹீரோவாக உருவெடுத்தவர் அதன்பின் பல வெற்றி படங்களில் நடித்தார்.
பின்னர் ஒரு கட்டத்தில் படவாய்ப்பு இல்லாமல் இருந்த அரவிந்த்சாமிக்கு கடல் படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார் மணிரத்னம். ஆக இப்போது மீண்டும் பிசியாகி விட்ட அரவிந்த்சாமி, ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் நடித்து வருகிறார்.
தற்போது சதுரங்கவேட்டை-2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், வணங்காமுடி படங்களில் நடித்து வரும் அரவிந்த்சாமி, அடுத்தபடியாக இயக்குனர் அவதாரம் எடுப்பதாக ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. அப்படி அவர் இயக்கும் படத்தை அவரை சினிமாவில் அறிமுகம் செய்த மணிரத்னமே தயாரிப்பதாகவும் கூறப்படுகிறது.