ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
திருமணம் எனும் நிக்காஹ், அகம், நகர்வலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் தீக்ஷிதா மாணிக்கம். விளம்பர படங்களிலும் நடித்து வந்தார், மாடல் அழகியாகவும் இருந்தார். தீக்ஷிதாவும், இசை அமைப்பாளர் தரணும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார்கள். தரண் பாரிஜாதம் படத்தில் அறிமுகமாகி சித்து பிளஸ் 2, போடா போடி, சமர், தகராறு, நாய்கள் ஜாக்கிரதை, தம்பிக்கு இந்த ஊரு, ஆஹா கல்யாணம் உள்பட 25 படங்களுக்கு மேல் இசை அமைத்தவர்.
இவர்களின் காதலுக்கு இரண்டு குடும்பமும் பச்சைக்கொடி காட்டிவிட்டதால் எளிய முறையில் நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் இரு குடும்பத்தாரும் கலந்து கொண்டனர். வருகிற செம்படம்பர் மாதம் 15ந் தேதி திருப்பதியில் திருமணம் நடக்கிறது. 16ந் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.