இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் தளபதி பிரபு இயக்கத்தில் இமான் இசையமைப்பில் உதயநிதி ஸ்டாலின், நிவேதா பெத்துராஜ், பார்த்திபன், சூரி மற்றும் பலர் நடிக்கும் 'பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது.
கிராமத்துக் கதையில் முதன் முறையாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம். படத்தின் டிரைலரைப் பார்க்கும் போது அரசியலில் நுழைய ஆசைப்படும் ஒரு இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. இதற்கு முன் அவர் நடித்து வெளிவந்த 'சரவணன் இருக்க பயமேன்' படத்தில் ஒரு காமெடி அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக நடித்திருந்தார். அதனால் அதை சீரியசான அரசியல் படம் என எடுத்துக் கொள்ள முடியாது.
ஆனால், இந்த 'பொதுவாக எம்மனசு தங்கம்' படத்தில் அவருடைய திரை அரசியல் சீரியசாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. ஊரின் பெரிய மனிதர் பார்த்திபனை எதிர்க்கும் இளைஞராக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். வழக்கமான கமர்ஷியல் படத்தில் என்னவெல்லாம் இருக்குமோ அத்தனையும் படத்தில் இருக்கிறது. இமானின் இசையில் பாடல்களை முதல் முறை கேட்கும் போதே ரசிக்க வைக்கிறது. பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவும் இனிமை.
பார்த்திபன் - மயில்சாமி கூட்டணி நிச்சயம் நம்மை ரசிக்க வைக்கப் போகிறார்கள் என்பதும் உறுதி. உதயநிதி ஸ்டாலின் - சூரி கூட்டணி காமெடியில் கலக்கியிருக்கிறார்கள்.
உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் படத்தைப் போல இந்தப் படம் வெற்றிப் படமாக அமையலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.