தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தனுஷ் தயாரித்து நடித்து, சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது. யு டியூப்பில் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்த்த டிரைலர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார் நடிகர் தனுஷ்.
ரஜினி, விக்ரம், விஜய், அஜித், சூர்யா படங்களின் வரிசையில் தான் நடித்த விஐபி-2 படத்தின் டிரைலரும் சேர்ந்துள்ளதை நினைத்து சந்தோஷத்தில் இருந்த தனுஷ், தற்போது கடும் அப்ஸெட்டில் இருக்கிறார்.
காரணம்... அவருடைய பிறந்தநாளான ஜூலை 28ஆம் தேதி விஐபி-2 படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் போனதுதான். படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிய பிறகும் படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகள் முடிக்காமலும், சென்சாருக்கு படத்தை அனுப்பாமலும் அலட்சியமாக இருந்துள்ளனர்.
கடைசி நேரத்தில் சுதாரித்துக் கொண்டு சென்சாருக்கு படத்தை அனுப்பியதில் ஒருவழியாக விஐபி-2 தமிழ் பதிப்புக்கு சென்சார் சர்ட்டிபிகேட் வாங்கிவிட்டனர். ஆனால் ஹிந்தி டப்பிங் வெர்ஷன் இன்னும் சென்சார் ஆகவில்லை. இதன் காரணமாக விஐபி-2 படத்தை ஒரே நாளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் வெளியிட வேண்டும் என்ற தனுஷின் திட்டம் தவிடுபொடியாகிவிட்டது.