Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'குருதிப் புனல்' உல்டாவா 'விக்ரம் வேதா' ?

22 ஜூலை, 2017 - 15:26 IST
எழுத்தின் அளவு:
Did-Vikram-Vedha-is-copy-of-Kuruthipunal.?

பழைய படங்களை எடுத்து தூசி தட்டி, இந்தக் காலத்திற்கேற்பட சில பட்டி, டிங்கரிங் வேலைகளைப் பார்த்து புதிதாக யோசித்த கதை போல படைப்பதுதான் இந்தக் காலத்திய டிரென்ட். அந்த விதத்தில் பழைய படங்களைக் காப்பியடிப்பதில் அட்லீ சிறந்த இயக்குனராக இருந்தார். அவருக்குப் போட்டியாக இப்போது 'விக்ரம் வேதா' படத்தின் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி வந்துவிட்டனர்.

ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இயக்கத்தில் கமல்ஹாசன், அர்ஜுன் மற்றும் பலர் நடிக்க 1995ம் ஆண்டு வெளிவந்த படமான 'குருதிப் புனல்' படத்தின் கதையை காப்பியடித்து ஒருசில மாற்றங்கள் செய்து 'விக்ரம் வேதா' படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். கமல்ஹாசன் கதாபாத்திரத்தில் மாதவன், அர்ஜுன் கதாபாத்திரத்தில் பிரேம், வில்லன் நாசர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளார்கள்.

'குருதிப் புனல்' படத்தில் நாசர் தலைமையில் தீவிரவாதக் கும்பல். 'விக்ரம் வேதா' படத்தில் விஜய் சேதுபதி தலைமையில் லோக்கல் ரவுடி கும்பல். காவல் துறைக்கும் வில்லன்கள் குரூப்புக்கும் இடையே நடக்கும் மோதல்தான் படத்தின் பொதுவான கதை.

இந்தக் கால ரசிகர்களை வேண்டுமானால் புதிய கதை எனச் சொல்லி ஏமாற்றி விடலாம். 'குருதிப் புனல்' மாதிரியான படங்களைப் பார்த்துப் பார்த்து ரசித்தவர்களிடம் 'விக்ரம் வேதா' கதையை புதிய கதை என்றெல்லாம் சொல்லி ஏமாற்ற முடியாது.

Advertisement
பொற்கோவிலில் ஸ்ருதிஹாசன்பொற்கோவிலில் ஸ்ருதிஹாசன் விஐபி-2 : தனுஷ் கோபம் ஏன்? விஐபி-2 : தனுஷ் கோபம் ஏன்?


வாசகர் கருத்து (12)

Viswanathan Venkatasubramanian - Noida,Uttar Pradesh,இந்தியா
08 ஆக, 2017 - 10:55 Report Abuse
Viswanathan Venkatasubramanian குருதிப்புனல் ஹிந்தி படமான துரோஹகால் ( கோவிந்த் நிஹ்லானி இயக்கியது) என்பதின் மறு பதிவுதான்
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
26 ஜூலை, 2017 - 01:28 Report Abuse
Aarkay காக்கா முட்டைக்கு பிறகு மக்கள் படம் முடிந்ததும் எழுந்து நின்று கைதட்டி கொண்டாடியதை பார்த்தேன். அற்புதம் வெட்டி பந்தா இல்லாத மாதவனும், இமேஜ் என்ற ஒன்றை பற்றி ஒரு துளியும் கவலைப்படாத விஜய் சேதுபதியும் கலக்கி இருக்கிறார்கள். நம்ப முடியாத அலப்பறைகள் செய்து ஸீன் காட்டும் மெகா ஸ்டார்களை நம்பி கோடி, கோடியாய் கொட்டிவிட்டு, குத்துதே குடையுதே என புலம்புவதற்கு பதில், காக்கா முட்டை, இறுதி சுற்று, துருவங்கள் பதினாறு, விக்ரம்-வேதா போன்ற தரமான படங்களை தாருங்கள். நாங்கள் எப்போதும் ஆதரிக்க தயார் ஒரு படம் உருவாக எவ்வளவு பேரின் உழைப்பு இருக்கிறது தெரியுமா? முதல் ஷோ பார்த்துவிட்டு ஊடகங்களில் விமர்சித்து அத்தனை உழைப்பையும் ஒரே நொடியில் காலி செய்து விடுகிறார்கள் என புலம்பும் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும், இது போன்ற நல்ல படங்கள் எப்படி எந்த ஸ்டார் வேல்யூவும் இல்லாமல் ஜெயிக்கின்றன என யோசித்தால் பிழைத்துக்கொள்வார்கள். நிச்சயம் ஓரிரு தேசிய விருதுகள் காத்திருக்கின்றன. All the very best the whole team Keep up the good work We enjoyed watching and the experience worths every penny spent....
Rate this:
24 ஜூலை, 2017 - 12:37 Report Abuse
தமிழன் விசி. நல்லூர் டேய் நீங்கள்ளாம் எங்கிருந்து டா வருவீங்க...
Rate this:
V.N.ASHWIN - chennai,இந்தியா
24 ஜூலை, 2017 - 12:18 Report Abuse
V.N.ASHWIN ஒரு நல்ல படத்தை பாராட்ட முடியாட்டியும், மட்டம் தட்டாம இருந்தா நல்லா இருக்கும். யாருமே நெகடிவ் ரெவியூஸ் கொடுக்காத படத்தை பத்தி நெகடிவ் - அ பேசினா எடுத்து படிப்பாங்க - னு நினைக்காதீங்க
Rate this:
VSK - CARY,யூ.எஸ்.ஏ
23 ஜூலை, 2017 - 03:17 Report Abuse
VSK போங்கடா பொங்கா ௧ படம் ரசிகனுக்கு பிடிசிருக்கு . போய் வேற வேலையை பாரு
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Chekka Chivantha Vaanam
  Tamil New Film 96
  • 96
  • நடிகர் : விஜய் சேதுபதி
  • நடிகை : த்ரிஷா
  • இயக்குனர் :பிரேம்குமார்
  Tamil New Film MGR
  Tamil New Film Kalavani Mappillai
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in