ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
களவாணி படத்தில் நடித்ததால் களவாணி ஓவியா என்றழைக்கப்பட்டு வந்த ஓவியா, இப்போது பிக்பாஸ் ஓவியாவாகி விட்டார். பிக்பாஸில் கலந்து கொண்டவர்களில் அதிக வாக்குகள் பெற்றுள்ள, பெருவாரியான ரசிகர்களை கவர்ந்து விட்டார். முக்கியமாக சினிமா நடிகர் நடிகைகள்கூட அவருக்கு தங்களது டுவிட்டரில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மெட்ரோ படத்தில் நாயகனாக நடித்த சிரிஷ், ஓவியா பற்றி தனது டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ஓவியாவுக்கு என்னுடைய படத்தில் நல்ல வேடம் ஒன்று காத்திருக்கிறது. அவர் ரொம்ப நல்ல மனம் படைத்தவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ராஜா ரங்குஸ்கி என்ற படத்தில் நடித்து வரும் சிரிஷ், இந்த படத்திலேயே ஓவியாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்போகிறாரா இல்லை அடுத்த படத்தில் கொடுக்கிறாரா என்பது பற்றி தெரிவிக்கவில்லை.