பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இவன் வேற மாதிரி படத்தில் அறிமுகமானவர் டில்லி அழகி சுரபி. அதையடுத்து தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தவர், புகழ் படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்தார். தற்போது ஜி.வி.பிரகாசுடன் அடங்காதே படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சுரபி.
இந்த நிலையில், ஏற்கனவே தெலுங்கில் எக்ஸ்பிரஸ் ராஜா, அட்டாக், ஜென்டில்மேன் ஆகிய படங்களில் நடித்தார். இந்த படங்கள் அவருக்கு வெற்றியாக அமைந்ததால், தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இதில் அல்லு சிரிஸ்க்கு ஜோடியாக சுரபி நடித்துள்ள எக்கடிக்கி போத்தவு சின்ன வடா என்ற படத்தில் நடித்திருக்கிறார் சுரபி. அதோடு அடுத்தபடியாக தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி தனது மார்க்கெட்டை ஸ்டெடி பண்ண திட்டமிட்டுள்ள சுரபி, ஐதராபாத்தில் குடியேறவும் வீடு பார்த்துக்கொண்டிருக்கிறாராம்.