Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பிக் பாஸ்' - கதறும் மற்ற தொலைக்காட்சிகள்

22 ஜூலை, 2017 - 12:02 IST
எழுத்தின் அளவு:
Bigboss-:-Other-channels-feel-sad

சினிமாவோ, டிவியோ சில சமயங்களில் ஏதாவது ஒரு விஷயம் 'டாக் ஆப் த டவுன்' ஆக மாறிவிடும். ஒரு படம் வந்து பெரிய வெற்றி பெற்றால் கொஞ்ச நாளைக்கு அதைப் பற்றிய பேச்சுக்களே இருக்கும். அப்படித்தான் சமீபத்தில் 'பாகுபலி 2' படம் வெளிவந்து அனைவரையும் பேச வைத்தது. அது சினிமாவில், இப்போது டிவியில் பிரம்மாண்டமான நிகழ்ச்சியாக 'பிக் பாஸ்' அனைவரையும் பேச வைத்துவிட்டது.

தமிழ்த் திரையுலகின் திறமைசாலி நடிகர், இயக்குனரான கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார் என்றதுமே மற்ற டிவிக்கள் ஆச்சரியப்பட்டார்கள். 'பிக் பாஸ்' நிகழ்ச்சியெல்லாம் தமிழ்நாட்டிற்கு 'செட்' ஆகாது என்றார்கள். முதல் நாள் நிகழ்ச்சி ஒளிபரப்பானதும், ஊர், பேர் தெரியாதவர்களை வைத்துக் கொண்டு எப்படி நிகழ்ச்சி மக்களைக் கவரும் என்றார்கள். ஆனால், இப்போதே ஒரே ஒரு பெயர் நிகழ்ச்சியைப் பற்றி உலகம் முழுவதும் பேச வைத்துவிட்டது அந்தப் பெயர் 'ஓவியா'.

டுவிட்டரில் கூட நேற்று டிரென்டிங்கில் வரும் அளவிற்கு ஓவியா பற்றிய 'ஹேஷ் டேக்குகள்' இடம் பெற்றன. கடந்த இரண்டு நாட்களாக நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் ஓவியாவை 'கார்னர்' செய்தது ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை. சிம்பு உள்ளிட்ட சில திரைப் பிரபலங்களும் ஓவியாவிற்கு ஆதரவாக டுவீட் போடுவது வரை அவரைப் பலருக்கும் பிடித்துவிட்டது.

இதனிடையே, 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குக் கிடைத்துள்ள வரவேற்பு மற்ற பொழுது போக்கு டிவிக்களையும், செய்தி டிவிக்களையும் மிகவும் பாதித்துவிட்டதாம். இரவு 9 மணிக்கு செய்தித் தொலைக்காட்சிகளில் சிலர் பங்கு கொண்டு விவாதம் என்ற பெயரில் கூச்சலிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கூட 'பிக் பாஸ்' வீட்டில் நடக்கும் சண்டை சுவாரசியமாக இருக்கிறது என இந்தப் பக்கம் மாறிவிட்டார்களாம். சீரியல்களைப் பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் கூட சீரியல் சண்டைகளை விட இந்த சண்டை நன்றாக இருக்கிறதே என சீரியல்களைப் பார்ப்பதை விட்டுவிட்டார்களாம்.

ஒரு முன்னணி தமிழ்த் தொலைக்காட்சி ஒன்றும் 'பிக் பாஸ்' போலவே வேறு ஒரு நிகழ்ச்சியை நடத்துவதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in