தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பா. ரஞ்சித் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் இதே நாளில் வெளிவந்த 'கபாலி' படம் இன்றுடன் ஓராண்டை நிறைவு செய்கிறது. பொதுவாக அனுபவம் வாய்ந்த இயக்குனர்களுடன் மட்டுமே நடித்து வந்த ரஜினிகாந்த், இரண்டு படங்களை மட்டுமே இயக்கியிருந்த இளம் இயக்குனரான ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிக்க சம்மதித்து அனைவரும் ஆச்சரியப்படுத்தினார்.
எப்போதும் தன் வயதை விடக் குறைந்த கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்த ரஜினிகாந்த், வயதான கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்ததும் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால், அனைத்திற்கும் பதில் சொல்லும் விதமாக 'கபாலி' படத்தின் டீசர் வெளிவந்து மிகப் பெரும் சாதனையைப் படைத்தது. வயதான கதாபாத்திரமாக இருந்தால் என்ன ரஜினி, ரஜினிதான் என்று அந்த டீசரிலேயே அசத்தினார் ரஜினிகாந்த்.
2016ம் ஆண்டு ஜுலை மாதம் 22ம் தேதி வெளிவந்த 'கபாலி' திரைப்படம் வசூலில் மிகப் பெரும் சாதனைகளைப் படைத்தது. எவ்வளவு கோடி லாபம் என்று வெளிப்படையாக தயாரிப்பு தரப்பிலிருந்து அறிவிக்கவில்லை என்றாலும் ஒரு சில ஏரியாக்களைத் தவிர மற்ற ஏரியாக்களில் படம் லாபத்தைக் கொடுத்தது என்று தெரிவித்தார்கள்.
'கபாலி' படத்தின் நீண்ட வருடங்களுக்குப் பிறகு வித்தியாசமான ரஜினிகாந்தைப் பார்க்க முடிந்தது என்று பலரும் பாராட்டினார்கள். திறமைசாலிகளுடன் மீண்டும் பணிபுரியும் பழக்கமுள்ள ரஜினிகாந்த் அடுத்து 'காலா' படத்திலும் பா. ரஞ்சீத்துடன் தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
'கபாலி' சாதனையை 'காலா'வே வந்து முறியடிக்கட்டும்.