ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இப்போதெல்லாம் வருகிற படங்களில் 50 சதவிகிதம் திகில் படங்கள்தான். குறைந்த பட்ஜெட்டில் எப்படி ரசிகர்களை நிறைய பயம் காட்டலாம் என்று யோசித்துதான் கதை எழுதுகிறார்கள். அந்த வரிசையில் வருகிறது மாஸ்க் என்ற படம். இதில் செண்ட்ராயன், முனிஸ்காந்த், பிளாக் பாண்டி, யோகி பாபு ஆகிய காமெடியன்கள் நடிக்கிறார்கள். இவர்களுக்கு உழைக்காமல் பணக்காரர்கள் ஆக வேண்டும் என்கிற ஆசை. இதற்காக அவர்கள் அலையும் போது ஒரு மர்ம மனிதனை சந்திக்கிறார்கள். அந்த மனிதன் நான் சொல்லும் ஆவியை சுடுகாட்டில் இருந்து கடத்தி வந்து ஒரு வீட்டுக்குள் அடைத்து வைக்க வேண்டும். மறுநாள் அந்த வீட்டுக்கு சென்ற பார்த்தால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும் என்கிறார். காமெடியன்கள் அவர் சொல்வதை செய்கிறார்கள். அவர்கள் நினைத்தது நடந்ததா என்பது கதை.
படத்துக்கு இளமையும், காதலும் வேண்டுமல்லவா அதற்காக ரிஷிதரன், ஷகானா என ஒரு இளம் ஜோடியும் நடிக்கிறார்கள், இவர்கள் தவிர மனோபாலா, ஷகிலாவும் நடிக்கிறார்கள். வெங்கடேஷ், பகவதி பாலா ஒளிப்பதிவு செய்கிறார்கள். இமானுவேல் இசை அமைக்கிறார். நடு இரவு, பூவம்பட்டி படங்களை இயக்கிய புதுகை மாரீசா இயக்குகிறார்.