'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா, மாஜி ஹீரோயின். அவரது அம்மா அதாவது கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா, கருப்பு வெள்ளை சினிமா காலத்து ஹீரோயின். சரோஜா 50 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். அவர் நடிப்பது 87 வயது சாருஹாசனுக்கு ஜோடியாக.
புதுமுக இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கும் படம் தாதா 87. இதில் சாருஹாசன் டெரர் தாதாவாக நடிக்கிறார். போட்டி தாதாவாக காமெடி நடிகர் ஜனகராஜ் நடிக்கிறார். இவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்து வருகிறார். ஜனகராஜ் மகன் நவீன் காமெடியனாக அறிமுகமாகிறார். இதுபற்றி இயக்குனர் விஜய் ஸ்ரீ கூறியதாவது:
இது வித்தியாசமான களத்தில் உருவாகும் முழு நீள காமெடி கதை. சாருஹாசன் தாதாவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற யோசித்து பிறகு தேர்வானவர் தான் சரோஜா. இதன் படப்பிடிப்பு நடந்தபோது நடிகை கீர்த்தி சுரேஷ் படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விசிட் அடித்து பாட்டி நடிப்பதை அமர்ந்து பார்த்து பிறகு அவரை பாராட்டி விட்டுச் சென்றார். என்கிறார் இயக்குனர் விஜய் ஸ்ரீ.