தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் கவர்ச்சி நடிகையான சன்னி லியோன் 21 மாத பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்துள்ளார்.
நான் தற்போது குழந்தை பெறுவது கஷ்டம், ஒருநாள் திடீரென கையில் குழந்தையுடன் வந்து நிற்பேன் என்று கூறியிருந்தார் சன்னி லியோன். அதன்படி, மகாராஷ்டிர மாநிலம் லத்தூரை சேர்ந்த 21 மாத குழந்தையான நிஷா என்கிற குழந்தையை தத்தெடுத்துள்ளார்.
இதுகுறித்து சன்னி லியோன் கூறியிருப்பதாவது... "நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன், அதை சொல்ல வார்த்தைகள் இல்லை. பொதுவாக குழந்தை பெற 9 மாதங்கள் ஆகும். நாங்கள் இந்த குழந்தையை தத்தெடுக்க மூன்று வாரங்கள் தான் ஆனது" என்று கூறியுள்ளார்.